அடர்த்தியாக முடி வளர வேண்டுமா? அப்போ கிரீன் டீயை இப்படி பயன்படுத்துங்க
மனிதர்களுக்கு இருக்கும் பெரும்பாலும் பிரச்சனைகளில் முடி பிரச்சனைகளும் ஒன்று.
முடி உதிர்தல், பொடுகு தொல்லை, வழுக்கை, வலுவிழந்த முடி மற்றும் நரை முடி என பல்வேறு முடி பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம்.
அடர்த்தியான மற்றும் நீளமான முடியை பெற, க்ரீன் டீயை பயன்படுத்தலாம்.
கிரீன் டீ உடல் எடையை குறைப்பதில் இருந்து பளபளக்கும் சருமம் வரை பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. அதே போல் முடி பராமரிப்பிலும் க்ரீன் டீயை பயன்படுத்தலாம்.
இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், கேடசின்கள் முடி வளர்ச்சிக்கு உதவுகின்றன. மேலும் முடியை வேரிலிருந்து திடப்படுத்தி முழுமையாக வளர உதவுகின்றன.
கிரீன் டீ ஹேர் வாஷ்
வழக்கம் போல் சர்க்கரை சேர்க்காமல் க்ரீன் டீயை ரெடி செய்து கொள்ளவும். சூடாக இருந்தால் ஆற வைக்கவும்.
பின்பு, வழக்கம் போல் ஹேர் வாஷ் செய்துவிட்டு, கடைசியாக க்ரீன் டீயை தலையில் ஊற்றி 5-10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும்.
பின்னர் வெறுமையாக தலையில் தண்ணீர் ஊற்றிவிட்டு வரவும்.
கிரீன் டீ ஹேர் மாஸ்க்
முட்டையின் மஞ்சள் கரு, தேன், க்ரீன் டீ சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.
இந்த ஹேர் மாஸ்க்கை உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் தடவி 30 நிமிடங்கள் மசாஜ் செய்து, பின்னர் ஷாம்பு கொண்டு ஹேர் வாஷ் செய்யவும்.
கிரீன் டீ ஆயில்
தேங்காய் எண்ணெய்யுடன் க்ரீன் டீ சேர்த்து மிக்ஸ் செய்து, உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்யவும்.
1 மணி நேரம் கழித்து முடியை அலசவும்.
கிரீன் டீ கண்டிஷனர்
ஆறவைத்த க்ரீன் டீயுடன் சில துளிகள் ரோஸ்மேரி எண்ணெய் மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர் சேர்க்கவும்.
இதை தலையில் தடவி ஊற விட்டு, பின்பு ஹேர் வாஷ் செய்யவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |