இலங்கைக்கு வெவ்வேறு மனைவிகளுடன் தனித்தனியாக தேனிலவுக்காக சென்ற பிரித்தானியர்! அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல்
பிரித்தானியாவை சேர்ந்த பிரபல தொகுப்பாளர், எழுத்தாளர் Greg Wallace புகழ்பெற்ற MasterChef நிகழ்ச்சியின் போது இலங்கையை சேர்ந்த சமையல் கலைஞரிடம் தான் தேனிலவுக்காக இலங்கைக்கு என் வெவ்வேறு மனைவிகளுடன் சில முறை சென்றிருக்கிறேன் என கூறியுள்ளார்.
பெரும் கோடீஸ்வரரான Gregன் சொத்து மதிப்பு £3.5 மில்லியன் (இலங்கை மதிப்பில் சுமார் ரூ 95 கோடி) ஆகும்.
இலங்கை சமையல்கலைஞர் Charith, Gregயிடம் நீங்கள் இலங்கைக்கு வந்துள்ளீர்களா என கேட்டார்? அதற்கு பதில் அளித்த Greg, அங்கு இருப்பதை நான் விரும்புகிறேன், சில முறை இலங்கைக்கு தேனிலவுக்கு சென்றுள்ளேன் என கூறினார்.
அவரின் இந்த ஜாலியான பதில் பார்வையாளர்களுக்கு ஒரு நிமிடம் அதிர்ச்சியை கொடுத்தது என்றே கூறவேண்டும்.
தேனிலவு என்பது ஒருமுறை செல்வது தானே என நினைத்து, சில முறையா என இலங்கையர் Charith, Gregயிடம் ஆச்சரியத்துடன் கேட்டார்.
பின்னர் தொடர்ந்து நகைச்சுவையாக பேசிய Greg, எனக்கு இலங்கை உணவுகள் மிகவும் பிடிக்கும், நான் அங்கு தேனிலவுக்கு சில முறை சென்றுள்ளேன் என கூறினார்.
57 வயதான Greg 4 முறை திருமணமானவர், அதில் மூன்று முறை விவாகரத்தையும் செய்திருக்கிறார் என தெரியவந்துள்ளது. அதன்படி 24 வயதில் முதல் திருமணம் செய்த அவர் ஆறே வாரத்தில் மனைவியை பிரிந்திருக்கிறார்.
பின்னர் 1999ல் இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார், அடுத்த 5 ஆண்டில் அவரையும் பிரிந்தார் Greg. இதன்பிறகு 2009ல் மூன்றாவது திருமணம் செய்த அவர் அடுத்த 15 மாதத்தில் மூன்றாவது மனைவியையும் விவாகரத்து செய்தார்.
நான்காவதாக தன்னை விட 21 வயது குறைவான அன்னி மேரியை கடந்த 2016ல் அவர் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.