பிரெஞ்சு நகரமொன்றில் கையெறிகுண்டு வீச்சு: 12 பேர் காயம்
பிரெஞ்சு நகரமொன்றில் அமைந்துள்ள மதுபான விடுதி ஒன்றிற்குள் மர்ம நபர் ஒருவர் கையெறிகுண்டு ஒன்றை வீசியதில் 12 பேர் காயமடைந்தனர்.
கையெறிகுண்டு வீச்சில் 12 பேர் காயம்
தென்கிழக்கு பிரான்சிலுள்ள Grenoble நகரில் அமைந்துள்ள மதுபான விடுதி ஒன்றில் உள்ளூர் மக்களும் வெளியூர் மக்களும் கூடி கால்பந்து போட்டிகளைப் பார்ப்பது வழக்கம்.
Je condamne avec la plus grande fermeté l'acte criminel d’une violence inouïe qui s'est produit dans un commerce du quartier du Village Olympique qui a causé plus de 10 blessés dont plusieurs graves.
— Éric Piolle (@EricPiolle) February 12, 2025
Je remercie les forces de secours et de sécurité pour leur intervention rapide.
இந்நிலையில், நேற்று இரவு 8.00 மணியளவில் அந்த விடுதிக்கு ஒருவர் வந்துள்ளார். அவர் கையில் நீண்ட துப்பாக்கி ஒன்று இருந்துள்ளது.
திடீரென அவர் கையெறிகுண்டு ஒன்றை வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
அந்த குண்டு வெடித்ததில் அங்கிருந்த 12 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இரண்டு பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொலிசார் அந்த மர்ம நபரைத் தேடிவரும் நிலையில், இது போதைக் கடத்தல் தொடர்புடைய தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |