இயற்கையான முறையில் நரை முடியை கருப்பாக இதை மட்டும் செய்ங்க
சிகை அலங்காரம், உடல் நிறம் மற்றும் முடியின் நீளம் ஆகியவை ஆண் மற்றும் பெண்களுக்கு உடல் தோற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
முடி நரைப்பது என்பது மனித வயதின் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாகும்.
இது அவர்களின் பாலினம் அல்லது இனத்தைப் பொருட்படுத்தாமல் அனைவரையும் பாதிக்கும் ஒரு பொதுவான விடயமாகும்.
வெள்ளையர்களுக்கு 20 வயதுக்கு பின்னரும், ஆப்பிரிக்கர்களில் 30 வயதுக்கு பின்னரும், ஆசியர்களில் 25 வயதுக்கு பின்னரும் நரை ஏற்படுகின்றது.
இதற்காக கடைகளில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தாமல் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு எவ்வாறு எந்தவொரு பக்கவிளைவுகளும் இல்லாமல் கருமையாக்கலாம் என்று தெரிந்துக்கொள்வோம்.
இந்த pack செய்வதற்கு இரண்டு பொருட்கள் மட்டுமே போதுமானது. அதாவது கரிய பவளம் ஒரு துண்டும் நெல்லிக்காய் சாறு 200 மில்லியும் தான் தேவைப்படும்.
- இந்த பொருட்களையும் எடுத்து, ஒரு பாத்திரத்தில் நெல்லிக்காய் சாறை ஊற்றி வைத்து அதனுடன் கரிய பவளம் சேர்த்து, குறைந்தது ஒரு 3 மணிநேரமாவது ஊற வைக்க வேண்டும்.
- பின் எண்ணெய் இல்லாத தலைமுடிக்கு பூசி, 3 மணிநேரம் வைத்து பிறகு குளித்தால் நல்ல ஒரு பலனை பெறலாம்.
குறிப்பு:- இதை வாரத்திற்கு இரண்டு முறை பாவித்தால் மட்டுமே நரைத்த முடி கருமையாகி, நீளமாக வளரும்.
மேலும் கரிய பவளம் என்னவென்று தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை காணவும்.