தவறு செய்துவிட்டேன்: வருந்தும் அமெரிக்க தாக்குதல்தாரியின் ஜேர்மன் காதலி...
அமெரிக்காவிலுள்ள பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தி 21 உயிர்களை பலிவாங்கிய தாக்குதல்தாரி, தான் தாக்குதல் நடத்தும் முன், ஜேர்மனியிலுள்ள தன் ’காதலிக்கு’ குறுஞ்செய்திகள் அனுப்பியதாக ஒரு தகவல் வெளியானது.
இந்நிலையில், ஒருவேளை நான் துப்பாக்கிச்சூட்டை நிறுத்தியிருக்கலாமோ என்று கேட்டு அந்தப் பெண் தன் சோகத்தை வெளிப்படுத்தியுள்ளாள்.
தாக்குதல்தாரியான Salvador Ramos (18)ம், ஜேர்மனியின் பிராங்க்பர்ட்டைச் சேர்ந்த Cece (15) என்ற அந்தப் பெண்ணும் இணையத்தில் சந்தித்துள்ளார்கள். கடந்த சில வாரங்களாக இன்ஸ்டாகிராம் வாயிலாக, துப்பாக்கி வாங்குவது, அதற்கு குண்டுகள் வாங்குவது போன்ற விடயங்கள் குறித்த குறுஞ்செய்திகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார்கள் இருவரும்.
இந்நிலையில், ஒருவேளை தன்னால் அந்த துப்பாக்கிச்சூட்டை நிறுத்தியிருக்கமுடியுமோ என்று கேட்டு அந்தப் பெண் தன் சோகத்தை வெளிப்படுத்தியுள்ளாள்.
தான் அந்த செய்திகளைப் படித்ததாகத் தெரிவிக்கும் Cece, ஆனால் Salvador சீரியஸாகவே சொல்கிறானா அல்லது சும்மா சொல்கிறானா என தன்னால் கணிக்கமுடியவில்லை என்று கூறியுள்ளாள்.
ஆனால், பள்ளிப் பிள்ளைகள் கொல்லப்பட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வெளியானதைப் பார்த்ததும், உடனடியாக அமெரிக்க பொலிசாரை தான் தொடர்புகொண்டதாக தெரிவித்துள்ளாள் Cece.
ஒருவேளை தான் நினைத்திருந்தால் இந்த பயங்கர சம்பவத்தைத் தவித்திருக்கலாமோ என தற்போது வருந்துவதாகத் தெரிவிக்கிறாள் Cece.
தனக்கு Salvador அனுப்பிய செய்திகளைப் பார்த்ததுமே தான் பொலிசாருக்கு தகவல் கொடுத்திருக்கவேண்டும். ஆனால், அவன் உண்மையாகவே தாக்குவான் என்று நினைக்கவில்லை என்று கூறும் அவள், அப்படி பொலிசாருக்கு தகவலளித்திருந்தால் விளைவுகள் வித்தியாசமாக இருந்திருக்கக்கூடும் என்றும், அப்படித் தான் செய்யாததற்காக தான் வருந்துவதாகவும் தெரிவிக்கிறாள்.