கனடாவில் மளிகைப்பொருட்கள் விலை உயரக்கூடும்: பின்னணியில் ஈரான் போர்
ஈரான் போர் காரணமாக எரிபொருள் செலவு அதிகரித்துள்ளதால், அந்த செலவை சில நிறுவனங்கள் மளிகைப்பொருட்களின் விலையுடன் சேர்க்கின்றன.
அதனால், கனடாவில் மளிகைப்பொருட்கள் விலை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எரிபொருள் செலவை மளிகைப்பொருட்கள் விலையுடன் சேர்க்கும் நிறுவனங்கள்
கனடாவில், Sunrise Farms, CTS Foods, Maple Leaf மற்றும் Tree of Life ஆகிய நிறுவனங்கள் எரிபொருள் செலவை கூடுதல் உபகட்டணமாக சேர்த்துள்ளன.
உணவுப்பொருட்கள் விநியோகிப்போர் என்னும் முறையில், போக்குவரத்துச் செலவு என்பது தங்களால் தவிர்க்க இயலாத ஒன்று என்று கூறும் அந்நிறுவனங்கள், இந்த உபகட்டணம் தற்காலிகமானதே என்றும் கூறியுள்ளன.

ஆக, அந்த நிறுவனங்களிடம் உணவுப்பொருட்கள் வாங்கும் மளிகைக்கடைகள், குறிப்பாக, சிறிய கடை உரிமையாளர்கள், அந்த செலவை மளிகைப்பொருட்கள் விலையுடன் சேர்க்கலாமா என்பது குறித்து யோசித்துவருகின்றார்கள்.
ஆக, ட்ரம்ப் ஈரான் மீது துவக்கிய போரால், சம்பந்தமேயில்லாமல் கனேடிய மக்கள் உணவுப்பொருட்களை கூடுதல் விலை கொடுத்து வாங்கும் நிலை உருவாகியுள்ளது.
விடயம் என்னவென்றால், அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமிடையிலான அமைதி ஒப்பந்தம் குறித்த சமீபத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், ஏப்ரல் 8ஆம் திகதி அறிவிக்கப்பட்ட இரண்டு வார கால போர் நிறுத்தம் ஏப்ரல் 22ஆம் திகதியுடன் முடிவடைகிறது.
மீண்டும் மோதல்கள் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன. ஆக, அப்படி மீண்டும் போர் தொடருமானால், எரிபொருள் மட்டுமின்றி உணவுப்பொருட்கள் விலையும் உயரக்கூடும் என்பதை மறுப்பதற்கில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |