மளிகை விற்பனையாளரின் மகன் 10 ஆம் வகுப்பில் தோல்வியடைந்து.., UPSC தேர்வில் தேர்ச்சி
மளிகை விற்பனையாளரின் மகனான ஒருவர் 10 ஆம் வகுப்பில் தோல்வியடைந்து பின்னர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
யார் அந்த நபர்?
ராஜஸ்தானின் பில்வாராவில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் ஈஸ்வர் லால் குர்ஜார். இவரது தந்தை சுவலால் குர்ஜார் ஒரு மளிகை விற்பனையாளர் ஆவார்.
ஈஸ்வர் சராசரி கல்வி நிலையைக் கொண்டிருந்தாலும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறவில்லை. இது அவருக்கு மனச்சோர்வையும், படிப்பை நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தையும் கொடுத்தது.
இருந்தாலும்.அவரது தந்தை சுவலால், "நம்பிக்கையையும் தைரியத்தையும் இழக்காதே" என்று கூறி தனது மகனை ஊக்கப்படுத்தினார்.
இதையடுத்து, 2012 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்புத் தேர்வில் 54% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார் ஈஸ்வர். அதைத் தொடர்ந்து 12 ஆம் வகுப்பில் 68% மதிப்பெண்களைப் பெற்றார்.
பின்பு ஈஸ்வர் குர்ஜார் எம்.டி.எஸ் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்று 2019 இல் அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார்.
இதையடுத்து, UPSC CSE தேர்வுக்குத் தயாராவதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் ஈஸ்வர். 2019 UPSC முதல்நிலைத் தேர்வில் முதல் முயற்சியில் தோல்வியை தழுவினார். 2020 இல் நேர்காணல் நிலையை எட்டினாலும் இறுதிப் பட்டியலில் இடம் பெறவில்லை. 2021 இல் பின்னடைவைச் சந்தித்தார்.
இறுதியில் 2022 ஆம் ஆண்டில் தனது நான்காவது முயற்சியிலேயே UPSC CSE-யில் வெற்றி பெற்றார், அகில இந்திய அளவில் 644-வது இடத்தைப் பிடித்தார், மேலும் இந்திய வருவாய் சேவை (IRS) கேடரில் நியமிக்கப்பட்டார். ஆனால், ஈஸ்வர் குர்ஜார் இந்திய காவல் பணியில் (IPS) சேர விரும்பினார்.
அதற்காக 2023 ஆம் ஆண்டில் தனது ஐந்தாவது முயற்சியில் AIR 555-வது இடத்தைப் பிடித்தார். 2024 ஆம் ஆண்டில், மூன்றாவது முறையாக UPSC CSE-யில் தேர்ச்சி AIR-ஐ 483 இடத்தை பிடித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |