மணமேடையிலேயே மணமகனைக் கத்தியால் குத்திய நபர்: புகைப்படக்கலைஞர் செய்த சமயோகித செயல்
இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில், மணமேடையில் வைத்தே மணமகனைக் கத்தியால் குத்தினார் ஒருவர்.
புகைப்படக்கலைஞர் செய்த சமயோகித செயல்
திங்கட்கிழமையன்று, மஹாராஷ்ட்ராவிலுள்ள அமராவதி நகரில் ஒரு திருமணம் நடைபெற்றுள்ளது.
அப்போது, திடீரென மணமேடையில் ஏறிய ரகோ ஜித்தேந்திர பாக்ஷி (Ragho Jitendra Bakshi) என்னும் நபர், மணமகனைக் கத்தியால் குத்தியுள்ளார்.
மணமகன் தாக்கப்பட்டதால் மக்கள் பதறி சிதறியோட, கத்தியால் குத்திய நபர் தப்பி ஓடியுள்ளார்.
இந்நிலையில், மணமக்களை வீடியோ எடுத்துக்கொண்டிருந்த புகைபடக்கலைஞர், தனது ட்ரோன் கமெரா உதவியுடன் மணமகனைக் குத்தியவரை பின்தொடர்ந்துள்ளார்.
அவரது ட்ரோன், தாக்குதல்தாரியைப் பின்தொடர்ந்து திருமண மண்டபத்துக்கு வெளியே மட்டுமின்றி, நெடுஞ்சாலையில் பயணிப்பதுவரை படம்பிடித்துள்ளது.
அவரது ட்ரோன் கமெரா காட்சிகள் உதவியால் குற்றவாளியை அடையாளம் கண்டுபிடித்த பொலிசார் அவரையும், அவர் தப்பியோட உதவிய மோட்டார் சைக்கிளில் வந்த நபரையும் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.
A wedding in #Maharashtra's #Amravati turned into a crime scene on Monday when the groom was stabbed on stage.
— Hate Detector 🔍 (@HateDetectors) November 12, 2025
A drone deployed to film the function not only captured the attack, it also tracked the fleeing accused and his accomplice for nearly two kilometres. pic.twitter.com/wh1vFUAiCc
இந்நிலையில், திருமணத்தில் பாடல் ஒலிக்கச் செய்த DJக்கு பணம் கொடுப்பது தொடர்பில் எழுந்த ஒரு சிறிய வாக்குவாதமே இந்த தாக்குதலில் முடிவடைந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணமகனுடைய உடல் நிலை சீரடைந்துவருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |