இரவுவேளையில் மணமகள் அனுப்பிய குறுஞ்செய்தி! திருமணத்தை நிறுத்திய மணமகன்
இந்திய மாநிலம் அசாமில் மணமகள் அனுப்பிய குறுஞ்செய்தியால் மணமகன் திருமணத்தை நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது.
திருமண நிச்சயம்
கவுகாத்தியைச் சேர்ந்த பொறியாளருக்கும், ஹவுலி நகரைச் சேர்ந்த பெண்ணொருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இருவரும் பரஸ்பரம் தங்கள் செல்போன் எங்களை பரிமாறிக்கொண்டு பேசி வந்தனர்.
மணமகனின் பரிசு
இந்த நிலையில் மணமகன் தனது வருங்கால மனைவிக்கு பரிசு அனுப்பியுள்ளார். அதில் ஷாம்பூ உள்ளிட்ட சில பொருட்கள் இருந்துள்ளன. இதனைப் பார்த்த மணப்பெண் திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், 'ஒரு பொறியாளராக இருந்துகொண்டு மலிவான ஷாம்பூவை அனுப்பி வைத்துள்ளீர்களே' என்று கூறியிருக்கிறார்.
திருமணம் வேண்டாம் எனக்கூறிய மணமகன்
அந்த குறுஞ்செய்தியைப் பார்த்த மணமகன் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்துள்ளார். இதனால் திருமணம் வேண்டாம் என பதில் அனுப்பியுள்ளார்.
அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனடியாக அனைவரும் மணமகன் வீட்டிற்கு சென்று அவரை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் அவர் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
இதனால் மணமகன் மீது பொலிஸில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், பொலிஸார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.