இறைச்சி விருந்து இல்லை என திருமணத்தை நிறுத்திய மணமகன்! அடிதடியில் ஈடுபட்டதால் பரபரப்பு
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் இறைச்சி உணவு விருந்தில் இடம்பெறாததால் மணமகன் வீட்டார் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருமண ஏற்பாடு
உத்தரபிரதேச மாநிலம் தியோரியாவில் வியாழன் அன்று அபிஷேக் ஷர்மா என்பவருக்கும், சுஷ்மா என்ற பெண்ணுக்கும் திருமண ஏற்பாடு நடந்தது.
மற்றொருபுறம் விருந்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் உணவு பட்டியலில் மீன், ஆட்டிறைச்சி இடம்பெறவில்லை.
இதனை அறிந்த மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் தகராறில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் மணமகன் அபிஷேக் ஷர்மா திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
இறைச்சி விருந்து இல்லை என தாக்குதல்
இதனால் மணப்பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கேள்வி எழுப்ப, அபிஷேக்கின் உறவினர்கள் கட்டையால் தாக்கியதாகவும், உதைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, மணமகளின் வீட்டார் காவல்நிலையத்தில் மணமகன் குடும்பத்தினர் தங்களை தாக்கியதாகவும், வரதட்சணை பெற்றதாகவும் புகார் அளித்தனர்.
அதன் பின்னர் அபிஷேக் உட்பட 4 பேரை பொலிஸார் சனிக்கிழமை அன்று கைது செய்ததாக தெரிவித்தனர். திருமண விருந்தில் இறைச்சி வகைகள் இல்லாததால் மணமகன் வீட்டார் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |