திருமணத்தில் கண்ணீர் விட்ட மணமகன்... நெகிழும் இணையம்
பொதுவாக, தாய் வீட்டைப் பிரிந்து கணவன் வீட்டுக்குச் செல்லும் மணமகள் கண்ணீர் விடும் காட்சிகளை திருமணங்களில் காணலாம்.
ஆனால், மணமகன் ஒருவர் கண்ணீர் சிந்தும் காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
திருமணத்தில் கண்ணீர் விட்ட மணமகன்...
சமூக ஊடகம் ஒன்றில் வெளியாகியுள்ள ஒரு வீடியோவில், திருமணம் முடிந்து கணவன் வீட்டுக்குப் புறப்படும் முன், தன் பெற்றோருக்கு மணமகள் மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
தாய் வீட்டைப் பிரியப்போவதை எண்ணி அந்தப் பெண்ணின் கண்களில் நீர் துளிர்க்க, அதைக் கண்ட அந்த மணகனால் கண்ணீரை அடக்கமுடியவில்லை.
அவர் தன் கண்களைத் துடைத்துக்கொள்ள, இந்தக் காட்சியை சமூக ஊடகத்தில் கண்ட மக்கள், இப்படி ஒரு மாப்பிள்ளை கிடைக்க கொடுத்துவைத்திருக்கவேண்டும் என நெகிழ்கிறார்கள்.
மணமகள் தன் பெற்றோரைப் பிரியும் நிகழ்ச்சியில் ஒரு மணமகன் கண்ணீர் சிந்துவாரானால், அவர் உன்னை கடைசி வரை கண்கலங்காமல் வைத்துக் காப்பாற்றுவார் என்கிறார் ஒருவர்.
இதுவல்லவா அன்பு என்கிறார் மற்றொருவர். அவர் அழுததைப் பார்த்து என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது என்கிறார் ஒருவர்.
இந்த வீடியோ வைரலாகி 1.8 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |