திருமணமான சில மணிநேரத்தில் இறந்த மணமகன்! இரண்டாவது கணவரும் உயிரிழந்ததால் சோகத்தில் ஆழ்ந்த மணமகள்
சென்னையைச் சேர்ந்த நபர் ஒருவர் திருமணமான சில மணிநேரத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
கோவிலில் திருமணம்
திருச்சியைச் சேர்ந்த ராஜலட்சுமி (36) என்ற பெண்ணுக்கும், சென்னையைச் சேர்ந்த IT நிறுவன ஊழியரான லோகேஷ் (40) என்பவருக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது.
ராஜலட்சுமிக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். அவரது முதல் கணவர் கொரோனா காலகட்டத்தில் உடல் நலமின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில், தம்பதியர் கோவிலில் திருமணம் முடிந்து உறவினர்கள் உட்பட அனைவரும் லோகேஷின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
பேரதிர்ச்சி
அங்கே மணமக்கள் இருவரும் ஓர் அறையில் இருந்தபோது, திடீரென லோகேஷின் வாய், மூக்கில் இருந்து நுரை தள்ளி மயங்கி விழுந்துள்ளார்.
இது திருமண வீட்டில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் லோகேஷின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் முடிவுகள் வெளியான பின்னரே லோகேஷின் மரணத்திற்கான காரணம் தெரிய வரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |