நடுவரின் முடிவுகள்... FIFA அமைப்பிடம் முறையிட்ட மொராக்கோ அணி
பிரான்ஸ் அணியிடம் அரையிறுதியில் வெற்றிவாய்ப்பை இழந்த மொராக்கோ அணி FIFA அமைப்பிடம் முறையாக புகார் ஒன்றை அளித்துள்ளது.
தங்களுக்கு உரிய நீதி
கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடர்பில் எவரும் எதிர்பாராதவகையில் அரையிறுதி வரையில் முன்னேறியது மொராக்கோ அணி. ஆனால் இரண்டு முறை உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ள பிரான்ஸ் அணியிடம் அரையிறுதியில் வெற்றியை இழந்தது.
@epa
பிரான்ஸ் அணிக்கு சம பலத்துடன் நெருக்கடி அளித்ததாகவே மொராக்கோ அணியின் ஆட்டம் தொடர்பில் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் துரதிர்ஷ்டமாக அவர்களால் இந்தமுறை இறுதி ஆட்டம் வரையில் முன்னேற முடியாமல் போனது.
இருப்பினும், தங்களுக்கு உரிய நீதி கிட்டவில்லை என FIFA அமைப்பிடம் மொராக்கோ அணி புகார் அளித்துள்ளது. அன்றைய ஆட்டத்தின் நடுவர் பிரான்ஸ் அணிக்கு சாதகமான சில முடிவுகளை முன்னெடுத்தார் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இரண்டாவது பாதி ஆட்டத்தில் தங்களுக்கு ஒரு பெனால்டி வாய்ப்பை நடுவர் மறுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.