குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் தப்பியவரின் தற்போதைய நிலை என்ன? வெளியான முக்கிய தகவல்
ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் தப்பித்த வருண் சிங்கின் உடல்நிலை குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் கடந்த 8ஆம் திகதி குன்னூர் அருகே விபத்தில் சிக்கியது. இதில் தலைமை தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி உள்ளிட்ட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் இந்த கோர விபத்தில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டுமே உயிர் பிழைத்தார். அவருக்கு 80% தீக்காயங்கள் ஏற்பட்டதையடுத்து பெங்களூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து அவரது தந்தை கே.பி.சிங் கூறியதாவது, வருணின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதால் தற்போது எதுவும் உறுதியாக சொல்ல முடியாது.
அவரின் உடல்நிலையில் ஏற்ற இறக்கங்கள் உள்ளது. ஆனால் என் மகனுக்காக தேசமே பிராத்தனை செய்து வருவதால் என் மகன் கண்டிப்பாக பிழைத்து விடுவான். அவருக்கு அளவற்ற அன்பும் அரவணைப்பும் கிடைத்தது எனக்கு பெருமிதமாக இருக்கின்றது.
வருண் ஒரு ராணுவ வீரர்... போராளி... அவர் வெற்றிகரமாக மீண்டு வருவார் என்று உணர்ச்சிகரமாக தெரிவித்துள்ளார்.