ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோருக்கு உருவாகிவரும் அச்சம்
ஜேர்மனியில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கும், சிறுபான்மையினருக்கும் ஒரு அச்சம் உருவாகிவருகிறது.
காரணம் என்ன?
அதாவது, சமீபத்திய கருத்துக்கணிப்புகள், ஜேர்மனியின் சில பகுதிகளில் Alternative for Germany (AfD) என்னும் கட்சிக்கு வரலாறு காணாத அளவில் ஆதரவு அதிகரித்துவருவதாக தெரிவித்துள்ளன.
இந்த AfD கட்சியினர் இனவெறுப்பாளர்கள் என பெயரெடுத்தவர்கள். ஜேர்மானியரல்லாத வெளிநாட்டினர் என்று தெரிந்தாலே அவர்கள் மீது வெறுப்பு காட்டுபவர்கள் இந்த கட்சியினர். ஆக, புலம்பெயர்ந்தோரையும் சிறுபான்மையினரையும் அவர்கள் எதிர்க்கிறார்கள்.
பாரபட்சமாக நடத்தப்படும் புலம்பெயர்ந்தோர்
இது குறித்து புலம்பெயர்ந்தோரிடம் விசாரிக்கும்போது, நன்கு கல்வி கற்ற ஒரு பெண், தானியங்கி நிறுவனங்களில் 20 வருட அனுபவம் வாய்ந்தவர், தான் ஒரு நேர்முகத் தேர்வுக்கு சென்றபோது, உங்களுக்கு இந்த வேலை கிடைக்காது, சுத்தம் செய்தல் போன்ற ஏதாவது வேலையைத் தேடிக்கொள்ளுங்கள் என வெளிப்படையாகவே கூறியுள்ளனர்.
இன்னொரு பக்கமோ, புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவளிப்பதைக் குறித்து வெளிப்படையாகவே விமர்சிக்கிறார்கள் AfD கட்சியினர்.
ஆக, AfD கட்சிக்கு ஆதரவு பெருகிவருவதால், ஜேர்மனியில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கும், சிறுபான்மையினருக்கும் தங்கள் எதிர்காலம் குறித்து அச்சம் உருவாகிவருகிறது. அவர்கள் அச்சத்தை உறுதிசெய்வாற்போல், பல இடங்களில் புலம்பெயர்ந்தோரும், சிறுபான்மையினரும் தாக்குதலுக்குள்ளாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |