கோடிக்கணக்கில் லாபம்! ஐபோன் விற்பனையில் அசுர வளர்ச்சி பெற்ற ஆப்பிள் நிறுவனம்
ஆப்பிள் நிறுவனம் மூன்றாவது காலாண்டிற்கான வருவாய் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் ஆப்பிள் நிறுவனத்தின் லாபம் இந்திய மதிப்பில் ரூ. 1,61,588 கோடிகளாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்படி ஆப்பிள் நிறுவன வருவாய் வருடாந்திர அடிப்படையில் 36 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
ஐபோன் வருவாய் 50 சதவீதமும் மேக் மற்றும் ஐபேட் மாடல்களின் விற்பனையும் வருடாந்திர அடிப்படையில் அதிகரித்து இருக்கிறது.
அதுமட்டுமின்றி அதிக பிரபலம் இல்லாத ஆப்பிள் நிறுவனத்தின் இதர பொருட்கள் பரிவு விற்பனையும் வருடாந்திர அடிப்படையில் 40 சதவீதம் வளர்ச்சி பெற்று இருக்கிறது. இந்த பிரிவில் ஏர்பாட்ஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் விற்பனையில் கணிசமான பங்குகளை பெற்றுள்ளன.
மேலும் கொரோனா தொற்றிலிருந்து பல்வேறு நாடுகள் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருவது, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படுவதே ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது.