GST 2.0: இந்தியாவில் விலை குறையும் கார்கள், பைக்குகள்
இன்று (செப் 22) முதல் நடைமுறைக்கு வரும் GST 2.0 மூலம், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் விலை குறைப்பு ஏற்படுகிறது.
புதிய GST கட்டண மாற்றத்தின் மூலம், முக்கிய கார் மற்றும் பைக் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக சலுகைகளை வழங்குகின்றன.
கார்களுக்கு விலை குறைப்பு ரூ.40,000 முதல் ரூ.30 லட்சம் வரை உள்ளது. இது இந்திய வாகன வரலாற்றில் மிகப்பெரிய மாற்றமாக கருதப்படுகிறது.
GST 2.0-ன் கீழ் விலை குறையும் கார்கள்
Mahindra: Bolero Neo, XUV 3XO, Thar, Scorpio N போன்ற மாடல்களுக்கு ரூ.1.01 லட்சம் முதல் ரூ.1.56 லட்சம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.
Tata Motors: Tiago, Tigor, Nexon, Safari போன்றவற்றுக்கு ரூ.75,000 முதல் ரூ.1.55 லட்சம் வரை சலுகை.
Toyota: Fortuner, Legender, Hilux, Innova Crysta போன்ற மாடல்களுக்கு ரூ.1.01 லட்சம் முதல் ரூ.3.49 லட்சம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.
Range Rover: சில மாடல்களுக்கு ரூ.30.4 லட்சம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.
Kia, Skoda, Hyundai, Renault, Maruti Suzuki, Nissan போன்ற நிறுவனங்களும் ரூ.35,000 முதல் ரூ.5.8 லட்சம் வரை சலுகைகளை அறிவித்துள்ளன.
GST 2.0-ன் கீழ் விலை குறையும் பைக்குகள்
350cc-க்கு குறைவான பைக்குகளுக்கான GST விகிதம் 28% இலிருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
Honda: Activa, Dio, Shine, Unicorn, CB350 போன்ற மாடல்களுக்கு ரூ.5,000 முதல் ரூ.18,800 வரை விலை குறைப்பு.
Hero, Bajaj, TVS, Royal Enfield போன்ற பிரபல மாடல்களும் விலை குறைவால் அதிக விற்பனையை எதிர்பார்க்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |