பாரிய கார்களுக்கு 40 சதவீதம் GST: ஆனாலும் விலை குறையும் - காரணம் என்ன?
பாரிய கார்கள் மீது 40 சதவீதம் GST விதிக்கப்பட்டாலும், அதன் விலை குறையவுள்ளது.
இந்தியாவின் GST கவுன்சில் சமீபத்தில் வாகனங்களுக்கான புதிய அவரை அமைப்பை அறிவித்துள்ளது.
இதன் மூலம் சிறிய கார்கள் மற்றும் 350சி-க்கு குறைவான இருசக்கர வாகனங்களுக்கு GST 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், பாரிய கார்கள் மற்றும் உயர்தர இருசக்கர வாகனங்களுக்கு GST 40 சதாவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இது பொது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திஇருந்தாலும், வாடிக்கையாளர்கள் கவாய்ப்பட தேவையில்லை. காரணம் வரி உயர்ந்தாலும் விலை குறையவுள்ளது.
இதற்கு முக்கிய காரணம், இதுவரை 28 சதவீதம் GST-க்கு மேலாக 17-22 சதவீதம் வரை Compensation Cess விதிக்கப்பட்டு வந்தது. இதனால் மொத்த வரி சுமை 45-50 சதவீதம் வரை இருந்தது.
ஆனால் புதிய அமைப்பில் cess 1.5 diesel மற்றும் Toyota Innova HyCross போன்ற வாகனங்கள் முன்பு 48-50 சதவீதம் செலுத்தியிருந்தன. இப்போது 40 சதவீதம் GST மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும்.
ஆனால், Royal Enfield 650 twins, KTM 390 Duke போன்ற 350cc-க்கு மேற்பட்ட பைக்குகள் 28 சதவீததிலிருந்து 40 சதவீத GST-க்கு மாற்றப்படுவதால் விலை உயரும்.
இந்த மாற்றம் 2025 செப்டம்பர் 22 முதல் அமுலுக்கு வரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
GST on cars India 2025, 40 GST big cars, car price drop GST, GST changes automobile sector, SUV GST rate India, luxury car tax India, GST on motorcycles 2025, compensation cess removed, GST Council vehicle tax, Hyundai Creta GST impact, Toyota Innova GST news, Royal Enfield GST hike, auto industry GST update