செப்டம்பரில் ரூ. 1.60 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்! தமிழ்நாட்டின் பங்கு என்ன?
மத்திய அரசின் ஜிஎஸ்டி வசூல் மாதந்தோறும் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) மிகப்பெரிய அதிகரிப்பு அரசாங்கத்திற்கு பெரும் வருவாயைக் கொண்டுவருகிறது. மேலும் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் நல்ல வருமானம் வருகிறது.
செப்டம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் தகவல் வெளியாகியுள்ளது. நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1,62,712 கோடி.
இந்த நிதியாண்டில் (2023-24), ஏப்ரல் மாதத்தில் இருந்து சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.1.60 லட்சம் கோடியைத் தாண்டியது இது நான்காவது முறையாகும் என்று அறிக்கைகள் கூறுகின்றன.
மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 6 மாதங்களில் நான்கு முறை ஜிஎஸ்டி வசூல் ரூ.1.6 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இந்த ஆறு மாதங்களில் மொத்த வரி வசூல் ரூ.9,92,508 கோடி.
செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் விவரம்:
மொத்த ஜிஎஸ்டி வசூல்: ரூ. 1,62,712 கோடி
CGST: ரூ. 29,818கோடி
SCST: ரூ. 37,657 கோடி
IGST: ரூ. 83,623 கோடி
cess: ரூ.11,613 கோடி
இந்த ஐஜிஎஸ்டி தொகையில் மத்திய அரசு ரூ.33,736 கோடியும், மாநில அரசுகள் ரூ.27,578 கோடியும் பெற்றுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இது தவிர, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கான சரக்கு சேவை வரியின் (ஜிஎஸ்டி) மொத்த பங்கு பின்வருமாறு:
மத்திய அரசு பெற்ற ஜிஎஸ்டியின் பங்கு: ரூ.63,555 கோடி
மாநிலங்கள் பெற்ற ஜிஎஸ்டியின் பங்கு: ரூ.65,235 கோடி
மாநில வாரியாக ஜிஎஸ்டி வருவாய் எப்படி இருக்கிறது?
மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகியவை ஜிஎஸ்டி வசூல் அதிகம் உள்ள மாநிலங்கள். ஆனால் thamizhnaadu மற்றும் குஜராத் மாநிலங்களும் அருகில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிக சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் செய்யும் 10 மாநிலங்களின் பட்டியல் இதோ.
- மகாராஷ்டிரா: ரூ. 25,137 கோடி
- கர்நாடகா: ரூ.11,693 கோடி
- தமிழ்நாடு: ரூ.10,481 கோடி
- குஜராத்: ரூ.10,129 கோடி
- ஹரியானா: ரூ. 8,009 கோடி
- உத்தரபிரதேசம்: ரூ. 7,844 கோடி
- தெலுங்கானா: ரூ. 5,226 கோடி
- மேற்கு வங்கம்: ரூ. 4,940 கோடி
- டெல்லி: ரூ.4,849 கோடி
- ஒடிசா: ரூ.4,249 கோடி
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |