பாப்கார்னுக்கு 18 சதவீதம் வரை வரி விதிக்க பரிந்துரை.., ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் அம்சங்கள்
55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பாப்கார்னுக்கு 18 சதவீதம் வரை வரி விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
GST ஆலோசனை கூட்டம்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர்களை உள்ளடக்கிய 55 -வது ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி குறித்து பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றது.
முக்கிய அம்சங்கள்
* உப்பு மற்றும் மசாலாப் பொருட்கள் சேர்த்து எந்தவிதமான எழுத்தும் இல்லாத கவரில் பாகார்னை வைத்துகொடுப்பதற்கு 5% ஜிஎஸ்டி வரி (unpackaged), பேக்கேஜ் செய்யப்பட்ட பாப்கார்னுக்கு 12% ஜிஎஸ்டி வரி (pre-packaged), கேரமல் பூசப்பட்ட பாப்கார்னுக்கு 18% வரி (caramel-coated) வரி விதிக்க பரிந்துரை .
* 20 லிட்டர் தண்ணீர் கேனுக்கு 12 சதவீதம் வரி விதிக்கப்படும் நிலையில் 5 சதவீதமாக குறைக்க பரிந்துரை
* ரூ.1000க்கு மேல் விலை கொண்ட துணிகளுக்கான வரி 5 சதவீதமாக இருக்கும் நிலையில் 12 சதவீதமாக உயர்த்த பரிந்துரை.
* ரூ.10,000க்கும் குறைவான சைக்கிளுக்கு 12 சதவீதம் வரி விதிக்கப்படும் நிலையில் 5 சதவீதமாக குறைக்க பரிந்துரை
* ரூ.15,000க்கு அதிமான விலை கொண்ட ஷூக்களுக்கு 15 சதவீதம் வரி விதிக்கப்படும் நிலையில் 28 சதவீதமாக உயர்ந்த பரிந்துரை
* ஓர்டர் செய்து வாங்கப்படும் உணவுகளுக்கான சர்வீஸ் சார்ஜ்க்கு விதிக்கப்பட்ட வரியை குறைப்பதற்கான ஆலோசனை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |