பானி பூரி கடை வியாபாரிக்கு GST நோட்டீஸ்.., வைரலாகும் புகைப்படம்
தமிழகத்தைச் சேர்ந்த பானி பூரி கடை வியாபாரிக்கு GST நோட்டீஸ் அனுப்பட்ட விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
GST நோட்டீஸ்
மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி (GST) துறையானது தமிழகத்தைச் சேர்ந்த பானி பூரி கடை வியாபாரிக்கு GST நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அந்த நோட்டீஸில் பானிபூரி விற்பனையாளர் கடந்த 2023 முதல் 2024-ம் ஆண்டில் ஒன்லைன் மூலம் பானி பூரி விற்பனை செய்து ரூ.40 லட்சம் வருமானம் ஈட்டியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு, ஒன்லைன் பேமெண்ட் தளமான RazorPay, PhonePe மூலம் ஏற்பட்ட பரிவர்த்தனைகளைக் கணக்கில் கொண்டு ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பொதுவாக, வங்கிகள் மட்டுமல்லாமல் யுபிஐ அப்ளிகேஷன்களில் அதிக பரிவர்த்தனை செய்த நபர்களின் விவரங்களும் வருமானவரித்துறைக்கு அனுப்பப்படும்.
அதன்படி தான் இந்த பானிபூரி விற்பனையாளரை கண்டறிந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பிரிவு 70-ன் கீழ் பானி பூரி விற்பனையாளர் நேரில் வந்து ஆஜராகி, ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், வரம்பை தாண்டிய பின்னரும் ஜிஎஸ்டி பதிவு பெறாமல் சேவைகளை வழங்குவது குற்றம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |