குஜராத் அணியிடம் அடிபணிந்த மும்பை இந்தியன்ஸ்! 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி
அகமதாபாத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.
35வது ஐபிஎல் போட்டி
நடப்பு ஐபிஎல் தொடரின் 35வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது.
முதலில் ஆடிய குஜராத் அணியில் சஹா 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் ஹர்திக் 13 ஓட்டங்களிலும், விஜய் ஷங்கர் 19 ஓட்டங்களிலும் வெளியேறினர்.
கில் அரைசதம்
எனினும் தொடக்க வீரர் சுப்மன் கில் அதிரடியாக 34 பந்துகளில் 56 ஓட்டங்கள் விளாசினார். அதனைத் தொடர்ந்து டேவிட் மில்லர், அபினவ் மனோகர் கூட்டணி 71 ஓட்டங்கள் குவித்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 207 ஓட்டங்கள் குவித்தது.
மில்லர் 22 பந்துகளில் 46 ஓட்டங்களிலும், அபினவ் மனோகர் 21 பந்துகளில் 42 ஓட்டங்களும் எடுத்தனர். திவட்டியா 5 பந்தில் 3 சிக்ஸர்களுடன் 20 ஓட்டங்கள் விளாசினார்.
5⃣0⃣ partnership ? for our घातक duo! ⚡@DavidMillerSA12 | @Abhinavms36 #GTvMI #AavaDe #TATAIPL 2023 pic.twitter.com/i2DQS5zBQp
— Gujarat Titans (@gujarat_titans) April 25, 2023
மும்பை இந்தியன்ஸ் அணியின் தரப்பில் பியூஷ் சாவ்லா 2 விக்கெட்டுகளும், அர்ஜுன் டெண்டுல்கர், பெஹ்ரெண்டோர்ஃப், மெரிடித் மற்றும் குமார் கார்த்திகேயா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
Wicket no. 1️⃣1️⃣ for PC bhai ?#OneFamily #GTvMI #MumbaiMeriJaan #MumbaiIndians #TATAIPL #IPL2023 pic.twitter.com/oEV3SWVPyb
— Mumbai Indians (@mipaltan) April 25, 2023
ரோகித் சர்மா 2 ஓட்டங்களில் அவுட்
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா 2 ஓட்டங்களில் ஹர்திக் பாண்ட்யா ஓவரில், அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் இஷான் கிஷன் 13 ஓட்டங்களிலும், திலக் வர்மா 2 ஓட்டங்களிலும், டிம் டேவிட் ஓட்டங்கள் எடுக்காமலும் சுழற்பந்து வீச்சில் வீழ்ந்தனர்.
208 to chase. #Believe ?#OneFamily #GTvMI #MumbaiMeriJaan #MumbaiIndians #TATAIPL #IPL2023 pic.twitter.com/tCH2dqdZKm
— Mumbai Indians (@mipaltan) April 25, 2023
குறிப்பாக நூர் அகமது மும்பை அணியை தனது அபார சுழலில் சரித்தார். கேமரூன் கிரீன் 33 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். எனினும், பின்னர் வந்த வீரர்கள் வெற்றிக்காக போராடினர்.
குஜராத் அணி வெற்றி
எனினும், மும்பை இந்தியன்ஸ் அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 152 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால், குஜராத் அணி 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேஹல் வதேரா 21 பந்துகளில் 40 ஓட்டங்களும், பியூஷ் சாவ்லா 18 ஓட்டங்களும் எடுத்தனர். நூர் அகமது 3 விக்கெட்டுகளும், மோகித் சர்மா மற்றும் ரஷீத் கான் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
A ????????? win by the Titans at our home turf! ??#TitansFAM, jalsa thai gaya ne? ??#GTvMI #AavaDe #TATAIPL 2023 pic.twitter.com/O4zPVerQQp
— Gujarat Titans (@gujarat_titans) April 25, 2023
இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.