தேர்தலுக்கு அஞ்சாத ரணில்; அடுத்த ஆண்டில் தேர்தலை நடத்துவதாக உறுதி!
இலங்கையில் தேர்தலை நடத்துவதற்கு தற்போதைய இலங்கை அரசாங்கம் அஞ்சுவதாக இன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அதற்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க, எந்தவொரு காரணத்துக்காகவும் தேர்தல்கள் மேலும் ஒத்திவைக்கப்படாதென தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு அஞ்சாத ரணில்
இலங்கையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது, அதற்கு ஆதரவாக வாக்களித்தவர்களுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்.
விசேடமாக எமக்கு வழங்கப்பட்ட ஆதரவுக்காக நன்றி செலுத்துகிறேன். இவ்வாறாக எமக்கு கிடைத்த பலத்தின் மூலம் நாம் முன்னோக்கி பயணிப்போம்.
இந்த வரவு செலவு திட்டத்துக்கு எதிராக வாக்களித்தவர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன். அத்துடன், இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்க முடியுமென லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
இதனை நான் உருவாக்கினேன். இதனால் என்னை எதிர்க்காதீர்கள். இலங்கையின் ஜனநாயகத்தை நான் மேலும் வலுப்படுத்தியுள்ளேன். இதனடிப்படையில்? தேர்தலை நடத்த நாங்கள் பயப்படுகிறோம் என எப்படிச் சொல்ல முடியும்? தேர்தல்கள் நடத்தப்படும்.
ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் இரண்டும் அடுத்த வருடம் நடைபெறும். இதனை தொடர்ந்து, சகல உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களும் நடத்தப்படும். அதனை நடத்துவதில் எந்த வித பிரச்சனைகளும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |