Guava Benefits: கொய்யாப்பழத்தின் மருத்துவ நன்மைகள்
தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டால் மருத்துவரை பார்க்க தேவையில்லை என கூறக்கேட்டிருப்போம். ஆனால் ஆப்பிளை விடவும் அதிக சத்துக்கள் கொண்டது கொய்யாப்பழம்.
100 கிராம் கொய்யா பழத்தில் சுமார் 300 மில்லிகிராம் விட்டமின் சி சத்து உள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதில் தொடங்கி எண்ணற்ற நன்மைகளை வழங்குகின்றன.
விட்டமின் சி, விட்டமின் பி6, விட்டமின் ஏ, மெக்னீசியம், புரதம், கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் நிறைந்திருக்கிறது.
செரிமானத்தை மேம்படுத்துவதுடன் மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வளிக்கிறது, இதிலுள்ள நார்ச்சத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது, குடல் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது.
குறைவான க்ளைசைமிக் குறியீடு கொண்ட கொய்யாப்பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது, சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.
நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளதால் சருமத்திற்கு நல்லது. இதிலுள்ள பொட்டசியச் சத்து ரத்த அழுத்தத்தை சீராக்கக்கூடியது, மெக்னீசியம் நரம்புத்தளர்ச்சியை போக்கும்.
விட்டமின் சி அதிகம் என்பதால் சளித்தொந்தரவுகளுக்கு தீர்வளிக்கிறது, உடம்பிற்கு குளிர்ச்சியை கொடுக்கக்கூடியது.
இதில் உள்ள விட்டமின் ஏ கண் ஆரோக்கியத்தை காக்கிறது, பார்வைக் குறைபாட்டை தடுக்கிறது, கண்புரை அபாயத்தையும் குறைக்கிறது.
காலை உணவுக்கு பின்பும், மதிய உணவுக்கு முன்பும் கொய்யாப்பழம் சாப்பிடுவது நன்மையை தரும்.
மிக எளிதாக அனைத்து காலங்களிலும் கிடைக்கும் கொய்யாப்பழத்தை தினமும் ஒன்று வீதம் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக வாழலாம்.