தலைமுடி காடு போல அடர்த்தியா வளரணுமா? இந்த இலைகளே போதுமானது
அனைத்து பெண்களுக்கும் பொதுவாகவே முடி உதிர்வது ஒரு பெரிய பிரச்சினையாகும்.
தலையில் உள்ள ஒவ்வொரு முடியும், முடியின் வேர் வளர்ச்சியை தூண்டுகின்றது.
முடி வளர்ப்பதற்கு பல இரசாயன முறைகளில் செய்யப்பட்ட பொருட்களை சேர்ப்பார்கள். அதை வாங்கி பாவிப்பது தான் அனைவரினதும் ஒரு பழக்கம்.
தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்தப்படும் பொருட்களை வாங்கி உபயோகித்தால் அதனால் நன்மை ஒன்றும் நிறைவேறாது.
ஆகவே இவ்வாறு எதுவும் பயன்படுத்தாமல் ஒரு தண்ணீரை வைத்து எவ்வாறு முடியை வளரச் செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
-
பிரியாணி இலை -05
- கொய்யாயிலை - 05
- அரிசி - 04 தே.கரண்டி
செய்முறை
-
ஒரு பாத்திரத்தில் கொய்யா இலை மற்றும் பிரியாணி இலையை சேர்த்து அதனுடன் தண்ணீர் சேர்த்து ஊறவைத்து ஒரு சில நிமிடங்களில் அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
- பின் அரிசியை ஊறவைத்து அதனுடைய தண்ணீரை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
- அடுப்பில் வைத்திருக்கும் இலை தண்ணீருடன் அரிசி ஊறவைத்த தண்ணீரை சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
- இறுதியாக வடிக்கட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பாவிக்கும் முறை
-
தினசரி குளிக்கும் முறைப்படி குளித்துக் கொள்ளுங்கள்.
- குளித்து முடித்தவுடன் இந்த தண்ணீரை தலையில் தேய்த்து மசாஜ் செய்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- பின்னர் மிஞ்சிய அந்த தண்ணீரைக் கொண்டு தலையை கழுவ வேண்டும்.
-
அதன்பின் வேறு எந்தவோரு தண்ணீரும் கொண்டு முடியை கழுவக் கூடாது.
இந்த இலகுவான பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் முடிக்கு என்ன வளர்ச்சி கிடைக்கு என்ற யோசனை எழுந்திருக்கும்.
ஆகவே பயன்படுத்தப்பட்ட பொருட்களில் உள்ள மருத்து குணங்கள் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
பிரியாணி இலை
-
இந்த பிரியாணி இலையில் உள்ள சத்துக்களானது முடியில் உள்ள அரிப்புகளை அகற்றும்.
-
முடி அதிகமாக வளரவும் உதவும்.
கொய்யா இலை
-
முடி உதிர்வதை தடுப்பதற்கு கொய்யா இலை பயன் தரும்.
-
முடிவை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும்.
-
பொடுகு வராமல் பாதுகாக்கும்.
அரிசி
-
அரிசியில் பச்சை அரிசி தவிற வேறு எந்த அரிசியும் பயன்படுத்தலாம்.
- தலை முடியை நீளமாக வளர வைக்க உதவும்.