முடி வளர்ச்சியை வேகமாக அதிகரிக்க இந்த ஒரு இலை போதும்: எப்படி பயன்படுத்துவது?
கொய்யா இலைகளில் வைட்டமின்களும், ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன. இது முடிக்கு மிகுந்த நன்மைகளை தரும்.
இந்த இலை உச்சந்தலையில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு சுற்றுச்சுழல் பாதிப்பிலிருந்து தலைமுடியை பாதுகாக்கிறது.
அந்தவகையில், முடி உதிர்வை நிறுத்தி வேகமாக முடி வளர்ச்சியை அதிகரிக்க கொய்யா இலையை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கொய்யா இலை- 1
- தண்ணீர்- 1 கப்
பயன்படுத்தும் முறை
முதலில் கொய்யா இலைகளை தண்ணீரில் சேர்த்து 20 நிமிடங்களுக்கு கொதிக்கவைத்து பின் குளிர வைக்கவும்.
இந்த திரவத்தை தலைமுடி மற்றும் உச்சந்தலையில் சீரம் போல பயன்படுத்தலாம்.
குளிப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக இந்த திரவத்தை உச்சந்தலையில் தடவி நன்கு மசாஜ் செய்யவும்.
இந்த கொய்யா இலை திரவத்தை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தலைமுடியில் தடவினால் சிறந்த பலன் கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |