கடைசி பந்தில் பார்படோஸ் அணி த்ரில் வெற்றி: மோட்டி ஆட்டநாயகன்
Barbados Tridents qualified for playoff: CPL டி20 போட்டியில் பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜமைக்கா கிங்ஸ்மெனை வீழ்த்தியது.
கென்சிங்டன் ஓவலில் நடந்த கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில், ஜமைக்கா கிங்ஸ்மெனை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் வீழ்த்தியது.
மாஸ் சதாகத் 47 ஓட்டங்கள்
பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் மற்றும் ஜமைக்கா கிங்ஸ்மென் அணிகளுக்கு இடையிலான CPL டி20 போட்டி கென்சிங்டன் ஓவலில் நடந்தது.
முதலில் ஆடிய ஜமைக்கா கிங்ஸ்மென் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ஓட்டங்கள் எடுத்தது. மாஸ் சதாகத் 34 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 47 ஓட்டங்கள் விளாசினார்.
ஜஹீம் பொல்லார்ட் 3 விக்கெட்டுகளும், குடாகேஷ் மோட்டி மற்றும் டேனியல் சாம்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
மோட்டி ஆட்டநாயகன்
பின்னர் ஆடிய பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழக்க, சாட்ரக் டெஸ்கார்ட் 42 பந்துகளில் 56 ஓட்டங்கள் விளாசினார்.
கடைசி பந்தில் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட, குடாகேஷ் மோட்டி (Gudakesh Motie) அணியை வெற்றி பெற வைத்தார்.
8 பந்துகளில் 17 ஓட்டங்கள் (1 சிக்ஸர், 2 பவுண்டரிகள்) மற்றும் 2 விக்கெட்டுகள் வீழ்த்திய குடாகேஷ் மோட்டி ஆட்டநாயகன் விருது பெற்றார்.


| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |