மற்றொரு ஆணின் புகைப்படங்களை வைத்திருந்த மனைவி: ஆத்திரத்தில் கணவன் செய்த செயல்
தன் மனைவி வேறொரு ஆணின் புகைப்படங்களை வைத்திருந்ததைக் கண்டுபிடித்ததால், அவரைக் கொலை செய்ததாக பிரித்தானியர் ஒருவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
வேறொரு நபருடன் வாழ முடிவு செய்த மனைவி
இங்கிலாந்திலுள்ள Suffolk என்ற இடத்தில் வாழ்ந்துவந்த பீற்றர் (Peter Nash, 47), ஜில்லு (Jillu, 43) தம்பதியரின் மகள் லூயிஸ் (Louise, 12). லூயிஸ் ஆட்டிஸக்குறைபாடு கொண்ட சிறுமி.
பீற்றர், ஜில்லு தம்பதியரின் வாழ்வில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக, தன்னுடன் பணியாற்றும் ஒரு ஆணுடன் நெருங்கிப் பழகத் துவங்கியுள்ளார் ஜில்லு.
தன் கணவரைப் பிரிந்து, புதிதாக ஒரு குடும்பத்தைத் துவங்க அவர் திட்டமிட்டுள்ளார் . பீற்றர், ஜில்லுவிடம், நீ வேறொரு ஆணுடன் நான்கு மாதங்களாக பழகுகிறாய் என்று குற்றம் சாட்ட, நான்கு மாதங்கள் அல்ல, எட்டு மாதங்கள் என்று கூறியுள்ளார் ஜில்லு.
கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம், 7ஆம் திகதி, அந்த ஆணுடன் ஜில்லு சென்றதை பீற்றர் கண்டதாக கூறப்படுகிறது.
ஆத்திரத்தில் செய்த செயல்
இந்நிலையில், செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி, ஜில்லு வேலைக்கு வராததாலும், லூயிஸ் பள்ளிக்கு வராததாலும், பொலிசாருக்கு தகவல் செல்ல, பொலிசார் பீற்றர் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
வீட்டில் சமையல் எரிவாயுவின் நாற்றம் வீச, உடனடியாக தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் கதவை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்ற பொலிசார் ஒரு அறையில் ஜில்லுவும், மற்றொரு அறையில் லூயிஸும் உயிரிழந்த நிலையில் கிடப்பதைக் கண்டுள்ளனர்.
லூயிஸ் அருகில் காயங்களுடனும் கத்தியுடனும் நின்ற பீற்றரை, டேஸர் மூலம் ஷாக் கொடுத்து பொலிசார் கைது செய்துள்ளனர்.
விசாரணையில் ஜில்லு திருமண ஒப்பந்தத்தை மீறியதால் அவரைக் கழுத்தை நெறித்துக் கொன்றதாக கூறிய பீற்றர், பிறகு தன் சொத்தான தன் மகளை யார் இனி பார்த்துக்கொள்வார்கள் என நீண்ட நேரமாக யோசித்து, தன் மகளைக் கத்தியால் குத்திக் கொன்றதாகவும், தானும் தற்கொலை செய்துகொள்வதற்காக தன்னைத்தான் கத்தியால் குத்திக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அடுத்த புதன்கிழமை, அதாவது மே மாதம் 17ஆம் திகதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.