120 வயதில் கின்னஸ் சாதனை படைத்த பாட்டி
கேரள மாநிலத்தை சேர்ந்த குஞ்சீரும்மா என்ற 120 வயது பெண்மணி, உலகின் மிகவும் வயதான நபர் என்பதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்.
கின்னஸ் சாதனை
குஞ்சீரும்மாவின் ஆதார் அடையாள அட்டை ஆவணத்தின் அடிப்படையில், அவருக்கு கடந்த ஜூன் மாதம் 120 வயதாகி உள்ளது. இதனையடுத்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் குஞ்சீரும்மா இடம் பிடித்திருக்கிறார்.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மரியா பிரன்யாஸ் என்ற 116 வயது பெண்மணியின் சாதனையை கேரள குஞ்சீரும்மா முறியடித்திருக்கிறார்.
கேரளத்தின் மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல் பகுதியை சேர்ந்தவர் குஞ்சீரும்மா. 14 வயதில் திருமணமாகி, 13 குழந்தைகளை பெற்றெடுத்தவர்.
அவர்களில் 7 குழந்தைகளை அல்பாயுசில் பறிகொடுத்திருக்கிறார். மிச்சமிருந்த குழந்தைகளை வளர்த்து அடுத்தடுத்து வாரிசுகள் என இன்று 5ம் தலைமுறையையும் அரவணைத்து நிற்கிறார் குஞ்சீரும்மா.
ஆரோக்கியமான வாழ்வு
கேரளத்தின் பாரம்பரிய முழுதானிய உணவு, முழு உழைப்பு, முழுமையான உறக்கம் ஆகியவையே குஞ்சீரும்மா 120 வயதை எட்டியிருப்பதற்கு அடிப்படை.
இதன் பலனாக இந்த கின்னஸ் சாதனை பாட்டிக்கு, இன்று வரை காது, கண் உள்ளிட்ட புலன்கள் சரியாக வேலை செய்வதுடன், வயதானவர்களை தாக்கும் நீரிழிவு உள்ளிட்ட எந்த பாதிப்பும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்.தற்போது முதுமை காரணமாக சக்கர நாற்காலியில் வலம் வருகிறார் குஞ்சீரும்மா.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |