ஆண்டுக்கு பல கோடிகள் வருவாய்... மொத்த சொத்துக்களையும் விட்டுவிட்டு துறவிகள் ஆன தம்பதி
இந்தியாவின் குஜராத் மாநில வைர வியாபாரி மற்றும் அவரது மனைவி ஆகியோர் தங்களின் மொத்த சொத்துக்களையும் விட்டுவிட்டு துறவறம் பூண்டுள்ளனர்.
ஆண்டுக்கு 15 கோடி வருவாய்
குஜராத் மாநிலத்தை சேர்ந்த வைர வியாபாரி திபேஷ் ஷாவின் நிறுவனம் ஆண்டுக்கு 15 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டி வந்துள்ளது. இந்த நிலையில் தங்களின் பல கோடிகள் மதிப்பிலான மொத்த சொத்துக்களையும் விட்டுவிட்டு துறவு வாழ்க்கையை நாடியுள்ளனர்.
5 ஆண்டுகளுக்கு முன்னர் திபேஷ் ஷாவின் 12 வயது மகன் பவ்யா ஷாவும் துறவியானார். தற்போது பாக்யரத்னா என அறியப்படும் அவர் தனது திக்ஷா விழாவிற்கு ஃபெராரியில் பயணம் செய்திருந்தார்.
அதேப்போன்று திபேஷ் ஷாவும் தமது திக்ஷா விழாவிற்கு ஜாகுவார் வாகனத்தில் சென்றுள்ளார். மட்டுமின்றி, பத்தாண்டுகளுக்கு முன்னர் திபேஷ் ஷாவின் ஒரே ஒரு மகளும் ஆடம்பர வாழ்க்கையை விட்டுவிட்டு துறவியானார்.
துறவு வாழ்க்கை வாழ முடிவு
சூரத்தில் வெற்றிகரமான வைர வியாபாரிகளில் திபேஷ் ஷாவும் ஒருவர். இவரது நிறுவனம் ஆண்டுக்கு 15 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டி வந்துள்ளது. இருப்பினும், திபேஷ் ஷாவும் அவரது மனைவியும் தங்கள் தொழிலை விட்டுவிட்டு துறவு வாழ்க்கை வாழ முடிவு செய்தனர்.
மேலும், மகள் துறவு நிலைக்கு திரும்பிய பின்னர் தாங்களும் இந்த முடிவுக்கு வந்ததாக திபேஷ் ஷா தம்பதி தெரிவித்துள்ளனர். செல்வத்தையும் வெற்றியையும் அனுபவித்துவிட்டோம், ஆனால் நிரந்தரமான அமைதி மற்றும் மகிழ்ச்சிக்கான தேடல் ஒருபோதும் முடிவடையவில்லை என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |