CSK அணியை சம்பவம் செய்த குஜராத் டைட்டன்ஸ்: 35 ரன் வித்தியாசத்தில் தோல்வி
அகமதாபாத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது.
நடப்பு ஐபிஎல்லின் 59வது போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதின. முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 231 ஓட்டங்கள் குவித்தது.
அணித்தலைவர் சுப்மன் கில் 104 (55) ஓட்டங்களும், சாய் சுதர்சன் 103 (51) ஓட்டங்களும் விளாசினர். பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரஹானே (1), ரச்சின் ரவீந்திரா (1), கெய்க்வாட் (0) அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
Shubman Gill brings up #TATAIPL's 100th ?
— IndianPremierLeague (@IPL) May 10, 2024
The captain leading from the front for @gujarat_titans ?
Follow the Match ▶️ https://t.co/PBZfdYswwj#TATAIPL | #GTvCSK pic.twitter.com/sX2pQooLx0
அடுத்து கைகோர்த்த டேர்ல் மிட்செல், மொயீன் அலி அதிரடியாக ஸ்கோரை உயர்த்தினர். அரைசதம் விளாசிய மிட்செல் 34 பந்துகளில் 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 63 ஓட்டங்கள் குவித்து அவுட் ஆனார்.
அதனைத் தொடர்ந்து மொயீன் அலி 56 (36) ஓட்டங்களில் ஆட்டமிழக்க, CSK அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.
ஷிவம் தூபே 21 ஓட்டங்களிலும், ஜடேஜா 18 ஓட்டங்களிலும் வெளியேற, எம்.எஸ்.தோனி கடைசி கட்டத்தில் சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
20 ஓவர்கள் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 196 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது. தோனி 11 பந்துகளில் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 26 ஓட்டங்கள் எடுத்து களத்தில் நின்றார்.
The Helicopter Shot ?
— IndianPremierLeague (@IPL) May 10, 2024
A maximum from #CSK's Number 7️⃣?
Watch the match LIVE on @StarSportsIndia and @JioCinema ??#TATAIPL | #GTvCSK pic.twitter.com/2QAN3jPjTb
குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் மோஹித் ஷர்மா 3 விக்கெட்டுகளும், ரஷீத் கான் 2 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் மற்றும் சந்தீப் வாரியர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |