ருத்ர தாண்டவமாடிய தமிழன் விஜய் ஷங்கர்! கொல்கத்தாவை அடித்து நொறுக்கிய குஜராத் அணி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
குர்பாஸ் மிரட்டல் ஆட்டம்
ஈடன் கார்டனில் நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி முதலில் ஆடி 179 ஓட்டங்கள் குவித்தது. குர்பாஸ் 81 ஓட்டங்களும், ரஸல் 34 ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய குஜராத் அணியில் கில் 49 ஓட்டங்கள் எடுத்து நரைன் ஓவரில் அவுட் ஆனார். அதன் பின்னர் கேப்டன் ஹர்திக் 26 ஓட்டங்களில் வெளியேறினார்.
5⃣0⃣ - What a BOSS innings! ?#KKRvGT | #AmiKKR | @RGurbaz_21 pic.twitter.com/WvRI27pTaY
— KolkataKnightRiders (@KKRiders) April 29, 2023
ருத்ர தாண்டவம் ஆடிய விஜய் ஷங்கர்
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய தமிழக வீரர் விஜய் ஷங்கர் சிக்ஸர் மழை பொழிந்தார். மறுமுனையில் டேவிட் மில்லர் அதிரடி காட்டினார்.
இதன்மூலம் குஜராத் அணி 17.5 ஓவரில் 180 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாயசத்தில் வெற்றி பெற்றது. விஜய் ஷங்கர் 24 பந்துகளில் 5 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 51 ஓட்டங்களும், மில்லர் 18 பந்துகளில் 32 ஓட்டங்களும் எடுத்தனர்.
— Gujarat Titans (@gujarat_titans) April 29, 2023