IPL 2024: மும்பை இந்தியன்ஸுக்கு மரண அடி கொடுத்த குஜராத் டைட்டன்ஸ்..கடைசி ஓவரில் கோட்டைவிட்ட ஹர்திக் பாண்டியா
ஐபிஎல் 2024 தொடரின் 5வது போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.
சாய் சுதர்சன் 45
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைவராக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்துவீச்சை தெரிவு செய்தார்.
அதன்படி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் விருத்திமான் சஹா 19 ஓட்டங்களும், கில் 31 ஓட்டங்களும் எடுத்தனர்.
Just Bumrah Things ?♂️@Jaspritbumrah93 on target in his first over ?#GT reach 47/1 after 6 overs
— IndianPremierLeague (@IPL) March 24, 2024
Watch the match LIVE on @JioCinema and @StarSportsIndia ??
Match Updates ▶️ https://t.co/oPSjdbb1YT #TATAIPL | #GTvMI pic.twitter.com/Zt6vIEa0me
அடுத்து சாய் சுதர்சன் 45 ஓட்டங்கள் விளாசினார். அதன் பின்னர் வந்த வீரர்கள் சொதப்பிய நிலையில், ராகுல் திவட்டியா அதிரடியாக 15 பந்துகளில் 22 ஓட்டங்கள் எடுக்க குஜராத் அணி 168 ஓட்டங்கள் குவித்தது.
சிறப்பாக பந்துவீசிய பும்ரா 14 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளும், கோட்ஸி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் இஷான் கிஷன் டக் அவுட் ஆனார்.
David Miller joins Sai Sudarshan ??
— IndianPremierLeague (@IPL) March 24, 2024
They reach 114/3 after 14 overs
What target are @gujarat_titans looking on from here ?
Follow the match ▶️ https://t.co/oPSjdbb1YT #TATAIPL | #GTvMI pic.twitter.com/4vvuApNfXv
ரோஹித் சர்மா 43
அடுத்து அபாரமாக ஆடிய ரோஹித் சர்மா 29 பந்துகளில் 43 ஓட்டங்கள் விளாசினார். நமன் தீர் 10 பந்துகளில் 20 ஓட்டங்களும், டேவால்டு ப்ரேவிஸ் 38 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 46 ஓட்டங்களும் எடுத்தனர்.
Ideal start for @gujarat_titans ?
— IndianPremierLeague (@IPL) March 24, 2024
Azmatullah Omarzai gets Ishan Kishan and Naman Dhir#MI are 30/2
Follow the match ➡️ https://t.co/oPSjdbb1YT#TATAIPL | #GTvMI pic.twitter.com/8p5LJlHudQ
அதனைத் தொடர்ந்து வந்த வீரர்கள் குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். கடைசி ஓவரை மிரட்டலாக வீசிய உமேஷ் யாதவ், மும்பை அணியின் ஹர்திக் பாண்டியா, பியூஸ் சாவ்லா விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றியை நிலைநாட்டினார்.
இதன்மூலம் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. உமேஷ் யாதவ், ஓமார்சாய், ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் மோஹித் ஷர்மா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
A ????? in the ???? ?
— IndianPremierLeague (@IPL) March 24, 2024
Sai Kishore and Mohit Sharma get the well set batters ?
Which way is this heading? ?
Follow the match ▶️https://t.co/oPSjdbb1YT #TATAIPL | #GTvMI | @gujarat_titans pic.twitter.com/H2pD8hh3f6
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |