தமிழகத்தின் இளம் வீரர் சாய் சுதர்சனை பாராட்டித் தள்ளும் முன்னணி வீரர்கள்!
தமிழக கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன் இன்னும் பல சாதனைகளை செய்வார் என நம்புவதாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பாராட்டியுள்ளார்.
அசத்திய சாய் சுதர்சன்
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக குஜராத் அணியில் களமிறக்கப்பட்ட தமிழக வீரர் சாய் சுதர்சன் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
Our batter Sai Sudharsan was on ? of his game enroute his match-winning 62* against Delhi Capitals! ?⚡#TitansFam, how good was our youngster's knock? Comment with emojis only! ?#AavaDe #DCvGT #TATAIPL 2023 pic.twitter.com/eMbsFIeVyx
— Gujarat Titans (@gujarat_titans) April 5, 2023
48 பந்துகளை எதிர்கொண்ட சாய் சுதர்சன் 62 ஓட்டங்கள் குவித்து அசத்தினார், அத்துடன் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
கேப்டன் பாண்டியா பாராட்டு
இந்நிலையில் டெல்லிக்கு எதிரான போட்டியில் சாய் சுதர்சனின் பேட்டிங்கை குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா வெகுவாக பாராட்டி உள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்த கருத்தில், கடந்த 15 நாட்களாக வலைப்பயிற்சியில் கடுமையாக உழைத்ததற்கான பலனை சாய் சுதர்சன் அடைந்துள்ளார்.
A hard-earned victory in the Capital! ⚡??#DCvGT | #AavaDe | #TATAIPL 2023 pic.twitter.com/VIB3px4xyz
— Gujarat Titans (@gujarat_titans) April 4, 2023
அடுத்த 2 ஆண்டுகளில் ஐபிஎல் போட்டிகள் மட்டுமின்றி, இந்திய அணிக்காகவும் சிறப்பான பல சாதனைகளை செய்வார் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
சாய் சுதர்சன் பேட்டிங் குறித்து பேசிய குஜராத் அணியின் சக வீரர் டேவிட் மில்லர், சுதர்சன் ஒரு மிகவும் திறமையான வீரர் என்றும், அவரை அணியில் சேர்க்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.