குலாப் ஜாமூன் Premix : நினைத்தவுடனே நாவூறும் சுவையில் குலாப் ஜாமூன் செய்யலாம்.. எப்படி தெரியுமா?
Healthy Food Recipes
By Kirthiga
குலாப் ஜாமுன்னுக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. இதை வேண்டாம் என்று சொல்வதற்கு யாருக்கும் மனம் வராது. ஆனால் இதை செய்வது சற்றே கடினம் தான்.
அதற்கு பலரும் கிடைகளில் விற்கப்படும் Premix வாங்கி பயன்படுத்துவார்கள். அதற்கு பதிலாக அதை நீங்கள் வீட்டிலேயே செய்யலாம். எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பால் பவுடர் - 2 கப்
- மைதா மா - 1/4 கப்
- ரவை - 2 தேக்கரண்டி
- பேக்கிங் சோடா - 1/2 தேக்கரண்டி
- நெய் - 2 தேக்கரண்டி
செய்முறை
- மேல் குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரே பாத்திரத்தில் கலந்து எடுத்துக்கொள்ளவும்.
- இதை கண்ணாடி போத்தலில் சேர்த்து வைத்தால் 3 மாதத்திற்கு அப்படியே இருக்கும்.
- உங்களுக்கு குலாப் ஜாமூன் சாப்பிட வேண்டும் என்று எண்ணம் வரும்போதெல்லாம், Premix எடுத்து அதில் 3 தேக்கரண்டி பால் சேர்த்து பிசைந்து எடுத்து சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
- பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சர்க்கரை ஏலம் மற்றும் குங்குமப்பூ சேர்த்து சர்க்கரை பாகு தயார் செய்துக்கொள்ளவும்.
- அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி, கலந்து வைத்த மாவை பொறித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- கொதித்துக்கொண்டிருக்கும் வேளையில் பொறித்துவைத்ததை சேர்க்க வேண்டும். 5 நிமிடமாவது ஊற விட்டு எடுத்தால் சுவையான குலாப் ஜாமூன் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US