தீபாவளி ஸ்பெஷல்: தித்திக்கும் சுவையில் குலாப் ஜாமூன்: எப்படி செய்வது?
பொதுவாகவே அனைவருக்கும் மிகவம் பிடித்த ஒரு தின்பண்டமாக இருப்பது குலாப்ஜாமூன்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் குண்டு குண்டு குலாப் ஜாமூன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- குலாப் ஜாமுன் மிக்ஸ்- 1
- பால்- ¼ லிட்டர்
- சர்க்கரை- 500g
- தண்ணீர்- ½ லிட்டர்
- நெய்
- ஏலக்காய்- 4
- குங்குமப்பூ- 10 கிராம்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் குலாப் ஜாமுன் மிக்ஸ் பவுடர் போட்டு காய்ச்சி ஆறவைத்த பாலை ஊற்றி கெட்டியாக பிசைந்துகொள்ளவும்.
பின் சர்க்கரை பாகு தயாரிக்க கடாயில் சர்க்கரை போட்டு அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் கரையவிட்டு எடுத்துக்கொள்ளவும்.
சர்க்கரை கரைந்து பாகு தயாராகும் போது குங்குமப்பூ மற்றும் ஏலக்காய் இடித்து சேர்க்கவும்.
இதன் பின் கடாயில் நெய் சூடுபடுத்தி மிதமான தீயில் வைத்து சிறிய சிறிய குலாப் ஜாமுன் உருண்டைகளை போட்டு பொரிக்கவும்.
இறுதியாக சர்க்கரை பாகில் குலாப் ஜாமுன்களை போட்டு ஒரு மணி நேரம் ஊறவிட்டு பின் சாப்பிடலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |