மெதுவாக ஆடிய பூரன்: 91 ஓட்டங்களில் சுருண்டு பொல்லார்ட் அணி படுதோல்வி
Gulf giants beat mi emirates by 6 wickets: கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் MI எமிரேட்ஸை வீழ்த்தியது.
துபாயில் நடந்த இன்டர்நெஷனல் லீக் டி20 போட்டியில், MI எமிரேட்ஸ் அணி கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணியிடம் படுதோல்வியடைந்தது.
புயல்வேக பந்துவீச்சு
கல்ஃப் ஜெயண்ட்ஸ் மற்றும் MI எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையிலான இன்டர்நெஷனல் லீக் டி20 போட்டி துபாயில் நடந்தது.
முதலில் ஆடிய MI எமிரேட்ஸ் அணிக்கு ஓமர்சாய்,ஷாமர் ஜோசப் தனது புயல்வேக பந்துவீச்சால் அதிர்ச்சி கொடுத்தனர்.
முகமது வசீம் 4 ஓட்டங்களில் வெளியேற, ஷாமர் ஜோசப் பந்துவீச்சில் குசல் பெரேரா (6), சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி (0), ரூதர்போர்டு (0) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
விக்கெட் இழப்பை சமாளிக்க மிகவும் பொறுமையாக ஆடிய நிக்கோலஸ் பூரன் (Nicholas Pooran), 34 பந்துகளில் 23 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து விஸே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
கல்ஃப் ஜெயண்ட்ஸ் வெற்றி
அடுத்து பொல்லார்ட் 13 ஓட்டங்களிலும், ஷெப்பர்ட் 13 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார்.
இறுதியில் MI எமிரேட்ஸ் அணி 19.3 ஓவர்களில் 91 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஷாமர் ஜோசப், டேவிட் விஸே தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 13.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 93 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. இப்ராஹிம் ஜட்ரான் 35 பந்துகளில் 50 ஓட்டங்கள் விளாசினார். ஷாமர் ஜோசப் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
