படுதோல்விக்கு ஓமனை பழிதீர்த்த நேபாள அணி: 5 விக்கெட்டுகளை சாய்த்து மிரட்டிய குல்சன்
ஓமன் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நேபாளம் 81 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆசிப் ஷேய்க் 94 ஓட்டங்கள்
ஓமன், நேபாளம் அணிகளுக்கு இடையிலான ஐசிசி கிரிக்கெட் உலகக்கிண்ண லீக் 2 போட்டி கிர்திபூரில் நடந்தது.

முதலில் ஆடிய நேபாளம் 49.5 ஓவர்களில் 256 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. ஆசிப் ஷேய்க் 94 (97) ஓட்டங்களும், அர்ஜுன் குமல் 48 (87) ஓட்டங்களும், அதிரடி காட்டிய ஆரிப் ஷேய்க் 43 (24) ஓட்டங்களும் விளாசினார்.
நதீம் கான் 3 விக்கெட்டுகளும், ஷகீல் அகமது மற்றும் ஹஸ்னைன் ஷா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய ஓமன் அணியில் ஹஸ்னைன் 29 ஓட்டங்களும், ஹம்மது மிர்ஸா 34 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

175 ஓட்டங்களுக்கு ஆல்அவுட்
ஆனால் சித்தார்த் (0), ஆர்யன் (6), ஜிதன் (3) ஆகியோர் சொதப்பினர். நேபாள பந்துவீச்சாளர் குல்சன் ஜா ஓமனுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார்.
ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய விநாயக் சுக்லா 41 பந்துகளில் 36 ஓட்டங்கள் எடுத்தார். 39.5 ஓவர்கள் வரை தாக்குபிடித்த ஓமன் அணி 175 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
அபாரமாக பந்துவீசிய குல்சன் ஜா (Gulsan Jha) 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 81 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, கடந்த முறை 102 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அடைந்து தோல்விக்கு ஓமனை பழிதீர்த்தது நேபாளம்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |