ஒரே பவுன்சரில் அனைவரையும் வியக்க வைத்து தேசிய அணிக்கு தேர்வான இளம் வீரர்! திணறிய பேட்ஸ்மேன்கள்... வைரலாகும் வீடியோ
தனது அபார பந்துவீச்சின் காரணமாக அணித்தேர்வாளர்களை வாயைப் பிளக்க வைத்த இளம் வீரர் ஒருவர் தேசிய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
குல்ஷன் ஜா என்ற இளம் வீரருக்கு தான் நேபாள தேசிய அணிக்கு விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த குல்ஷன் ஜா இதுவரை 2 உள்நாட்டுப் போட்டிகளில் மட்டும்தான் ஆடியுள்ளார். ஆனால் இந்த 2 போட்டிகளில் இவர் பந்து வீசிய விதம் அணித்தேர்வாளர்களை வாயைப் பிளக்க வைத்தது.
இது தொடர்பான வீடியோவும் சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது.
Gulshan Jha
— Poudel Sagar (@poudelsagar__) August 21, 2021
New Recruit of Team Nepal for #CWCL2 & the series with PNG.@sourabhsanyal @Bibhu237@vmanjunath @Arnavv43 @arunbudhathoki @TheBiddhut @Fancricket12 #KTMMayorsCup pic.twitter.com/xdQj7sfuuW
நேபாள பொலிஸ் கிளப்புக்கும் நேபாள் ஆயுதப்படை கிளப்புக்கும் இடையிலான போட்டியில் குல்ஷான் வீசிய வேகப்பந்து, பவுன்சருக்கு எதிரணி வீரர்கள் அனைவரும் திணறி போனார்கள். 7 ஓவர்களில் 36 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார்.
காத்மண்டு மேயர் அணிக்கு எதிராக குல்ஷான் ஜா, காடக் பொஹோரா என்ற வீரருக்கு வீசும்போது அவர் ஹெல்மெட்டுக்கு அருகே விஸ் என்ற காற்றின் ஒலியுடன் பந்து கடந்து சென்றது, பின் பேட்ஸ்மேன் எம்பிக் குதித்து ஒதுங்கினார்.
மோசமான ஆட்டக்களத்தில் இப்படி பவுன்ஸ் செய்த குல்ஷன் ஜா-வைத் தேர்வாளர்கள் எப்படி தேர்வு செய்யாமல் இருக்க முடியும் என ஆச்சரித்துடன் கேட்க தான் தோன்றுகிறது.