கனடாவில் இந்திய நடிகரின் உணவகத்தில் துப்பாக்கிச்சூடு! பரபரப்பு சம்பவம்
கனடாவில் புதிதாக திறக்கப்பட்ட கபில் ஷர்மாவின் உணவகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
புதிய உணவகம்
பிரபல இந்திய நகைச்சுவை நடிகரான கபில் ஷர்மாவுக்கு சொந்தமான புதிய உணவகம் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் திறக்கப்பட்டது.
Kap's Cafe என்ற இந்த உணவகத்தில் அதிகாலை 1.50 மணியளவில் குறைந்தது 8 துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்த தாக்குதலுக்கான நோக்கி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவான பப்பர் கல்சா இன்டர்நேஷனலின் செயல்பாட்டாளர் Harjit Singh Laddi, ஒரு சமூக ஊடகப் பதிவில் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |