பிரபல கிரிக்கெட் வீரர் வீட்டில் துப்பாக்கிசூடு - அதிர்ச்சியில் ரசிகர்கள்
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷாவின் வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
நசீம் ஷா
பாகிஸ்தான் இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் தொடருக்காக பாகிஸ்தான் வீரர் நசீம் ஷா அணியினருடன் ராவல்பிண்டியில் தங்கியுள்ளார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு சுமார் 1:45 மணியளவில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர், கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் லோயர் டிர் மாவட்டத்தின் மாயார் பகுதியில் நசீம் ஷாவின் பூர்வீக வீட்டின் மீது சரமாரியாகத் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில், அவரின் வீட்டின் முன்பகுதி, ஜன்னல்கள், கார் ஆகியவை சேதமடைந்துள்ளது. வீட்டு கதவில், துப்பாக்கி தோட்ட துளைகள் காணப்படுகிறது.
5 பேர் கைது
துப்பாக்கி சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள், உடனடியாக அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை தொடங்கினர்.

இதனையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட 5 நபர்களை கைது செய்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், தனிப்பட்ட மோதல் காரணமாகவே இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கும் என கருதப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, நசீம் ஷாவின் வீட்டிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் அவரின் குடும்பத்தினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
நசீம் ஷாவின் வீட்டின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |