யாழ்ப்பாணத்தில் இளைஞருக்கு துப்பாக்கிச் சூடு: வைத்தியசாலையில் அனுமதித்த பொலிஸார்
இலங்கை யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூடு காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு
யாழ்ப்பாணத்தின் மண்டைதீவு பகுதியில் இளைஞர் ஒருவரை துப்பாக்கிச் சூடு காயங்களுடன் இலங்கை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட இளைஞர் இன்று அதிகாலை 1.18 மணியளவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட இளைஞனின் தலையில் காயம் ஏற்பட்டு இருப்பதாகவும், ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாகவும் தமிழ்வின் பிராந்திய செய்தியாளர் தகவல் வழங்கியுள்ளார்.
இளைஞன் மீது எதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்ற காரணங்களும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |