ரூ.400க்கு நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பேர் சுட்டுக்கொலை!
இந்திய மாநிலம் பீகாரில் பால் பாக்கி தொடர்பில் இரு தரப்பு இடையே ஏற்பட்ட தகராறில், மூன்று பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ரூ.400 சண்டை
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள சுர்காபர் மற்றும் நியாஜிபூர் பகுதிகளில், ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு குழுக்கள் மோதிக் கொண்டன.
அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்கள் ஜெய் சிங் (50), ஷைலேஷ் குமார் (35) மற்றும் பிரதீப் குமார் (3) என தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார்.
முதற்கட்ட விசாரணையில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையே நடந்த ரூ.400 பால் பாக்கி தகராறில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது என தெரிய வந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், தப்பியோடியவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் காயமடைந்த இளைஞரின் பெயர் மின்டூஸ் (22) என்பதும், அவர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |