இளம்பெண் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 குழந்தைகள் உட்பட ஆறு பேர் பலி! இதயம் நொறுங்கியதாக முதல் பெண்மணி வேதனை
அமெரிக்காவில் பாடசாலையில் பெண் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆறு பேர் பலியானது குறித்து முதல் பெண்மணியான ஜில் பைடன் வேதனை தெரிவித்துள்ளார்.
பாடசாலையில் பெண் துப்பாக்கிச்சூடு
நாஷ்வில்லியின் புறநகர்ப் பகுதியில் உள்ள துவக்க பாடசாலை ஒன்றில், 28 வயது பெண்ணொருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் மூன்று குழந்தைகள் உட்பட 6 பேர் பரிதாபம் உயிரிழந்தனர்.
@Jonathan Mattise, AP
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில் இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஜில் பைடன் வேதனை
இதுகுறித்து வாஷிங்டன் மாநாட்டில் பேசிய முதல் பெண்மணியான ஜில் பைடன், 'இந்த பேரழிவு சம்பவம் எந்தவொரு அமெரிக்கருக்கும் இதயத்தை உடைக்கும். நானா உண்மையில் வார்த்தைகள் இல்லாமல் இருக்கிறேன். எங்கள் குழந்தைகள் சிறந்தவர்கள். நாங்கள் நாஷ்வில்லியுடன் பிரார்த்தனையில் நிற்கிறோம்' என கூறினார்.
@CNN
துயர சம்பவம் குறித்து வெள்ளை மாளிகையில் இருந்து எதிர்வினையாக பகிரங்கமாக பதிலளித்த முதல் நபர் ஜில் பைடன் ஆவார்.
@Susan Walsh/AP
இதற்கிடையில், துப்பாக்கிச்சூடு நடத்திய பெண் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் அவரது அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
@Nicole Hester/The Tennessean
@Metro Nashville Police Department