குணா குகையில் அந்த பாடலை எடுக்க வேண்டாம் என்று கூறினேன்- இயக்குநர் சந்தான பாரதி
குணா குகையில் "கண்மணி அன்போடு காதலன்" பாடலை எடுக்க வேண்டாம் என்று அப்போது நான் கூறினேன் என்று அப்பட இயக்குநர் சந்தான பாரதி நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.
குணா குகை
சமீப காலமாக, சமூக வலைத்தளங்களிலும், நண்பர்களின் வட்டங்களிலும் அனைவரும் சொல்லும் ஒரே படம் "மஞ்சுமெல் பாய்ஸ்".
தற்போது தமிழ் சினிமா பிரியர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகிறார்கள். குணா குகையை சுற்றித்தான் படத்தின் கதை நகரும்.
இந்த குகைக்கு "குணா குகை" என பெயர் வர காரணம் 33 வருடங்களுக்கு முன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான குணா படத்தில் வரும் "கண்மணி அன்போடு காதலன்" பாடல் இந்த குகைக்குள் தான் எடுக்கப்பட்டது.
இந்த பாடலின் ஹிட்டுக்கு பிறகுதான் இந்த குகைக்கு "குணா குகை" என்று பெயர் வந்தது.
தற்போது 33 ஆண்டுகளுக்கு பிறகு குணா படத்தின் குணா குகையும், கண்மணி அன்போடு பாடலும் மக்கள் மத்தியில் கொண்டப்படுகிறது.
குணா படத்தின் இயக்குநர் சந்தான பாரதி "கண்மணி அன்போடு காதலன்" பாடலின் படப்பிடிப்பை குணா குகையில் எடுக்க முடிவாவதற்கு முன் தனக்கும் கமல்ஹாசனுக்கு ஏற்பட்ட வாக்குவாதம் குறித்து நேர்காணல் ஒன்றில் தற்போது கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது..,
"குணா குகைக்குள் அந்த பாடலை எடுக்கலாம் என்பது குறித்து டிஸ்கஷன் சென்றபோது எல்லோருக்கும் அந்த ஐடியா பிடித்திருந்தது.
ஆனால் நான் வேண்டாம் என்று கூறினேன், அதற்கு கமல் ஏன் என்ன என்று என்னிடம் கேட்டார்.
அப்போது, அந்த ஸ்பாட்டை பார்க்க நாம் நான்கு பேர் சென்றபோதே ஒருத்தர் கையை ஒருத்தர் பிடித்து இறங்கி போய் அந்த பள்ளத்தை பார்த்தோம்.
ஆனால் ஷூட்டிங்கின் போது 100- 200 பேர் வரை இருப்பார்கள், எப்படி அவர்களை இறக்கிவிட்டு எப்படி அவர்களை மேலே கொண்டுவருவது என்று கமலிடம் கேட்டேன்.
அப்போ போதுமான பாதுகாப்பு இருந்தால் நாம் அந்த படிப்பிடிப்பை நடித்திவிடலாமா என்று கமல் கேட்டார், உடனே அப்போ பண்ணிடலாம் என்று நான் கூறினேன்.
பிறகு தயாரிப்பாளரிடம் பேசி, வனத்துறை அதிகாரிகளிடம் பேசி பாதுகாப்புகள் எல்லாம் தயார்செய்துவிட்டு, அந்த பாடலை உள்ளே படம்பிடித்தோம்" என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |