2 வயது குழந்தை மீது மர்ம நபர் துப்பாக்கி சூடு: பட்டப்பகலில் நடந்த பயங்கரம்
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் பட்டப்பகலில் பிஞ்சு சிறுவர்கள் மீது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிச்சிகன் மாகாணத்தின் டெட்ராய்ட் பகுதியிலேயே குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. வியாழக்கிழமை கூடைப்பந்து பயிற்சி முடித்து தந்தையும் இரு சிறுவர்களும் திரும்பியுள்ளனர்.
அப்போது திடீரென்று ஒரு வாகனத்தில் வந்த நபர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். என்ன நடக்கிறது என்பதை Brian Christian என்ற அந்த நபர் சுதாரிக்கும் முன்னர், தனது பிள்ளைகள் இருவர் ரத்தவெள்ளத்தில் கிடப்பதை அறிந்துள்ளார்.
உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்த அவர், வழியிலேயே 2 வயது மகன் Brison இறந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

9 வயதான இன்னொரு மகன் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாகவும், சிகிச்சையில் இருப்பதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் மிச்சிகன் மற்றும் டெட்ராய்ட் பொலிசார் விசாரணை முன்னெடுத்துள்ளனர். பிள்ளைகள் இருவரும் குறிவைக்கப்பட்டுள்ளனரா என்பது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
 ஆனால் முதற்கட்ட விசாரணைக்கு பின்னரே உறுதியான தகவல் வெளிவரும் எனவும் பொலிஸ் தரப்பு குறிப்பிட்டுள்ளனர். 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        