நாவூறும் சுவையில் ஆந்திரா குண்டூர் சிக்கன்.., எப்படி செய்வது?
குண்டூர் சிக்கன் என்பது ஆந்திராவின் புகழ்பெற்ற, காரசாரமான சிக்கன் உணவாகும்.
இந்த குண்டூர் சிக்கனை குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் ஆந்திரா குண்டூர் சிக்கன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தனியா - 2 ஸ்பூன்
- மிளகு - 1 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 5
- இஞ்சி - 1 துண்டு
- பூண்டு - 4 பல்
- சிக்கன் - ½ kg
- மஞ்சள் தூள் - ¼ ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- காஷ்மீரி மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- எண்ணெய் - 3 ஸ்பூன்
- கடுகு - 1 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- வெங்காயம் - 2
- பச்சை மிளகாய் - 2
- தக்காளி - 2
- கறிவேப்பிலை- 1 கொத்து
- கொத்தமல்லி இலை- சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு வாணலில் தனியா, மிளகு, சீரகம் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.
பின் இவற்றை நன்கு ஆற விட்டு மிக்ஸி ஜாரில் பொடியாக அரைக்கவும்.
அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் 2 ஸ்பூன் அரைத்த பொடி, நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு பல்லை சேர்த்து பேஸ்டாக அரைக்கவும்.

இதற்கடுத்து ஒரு பாத்திரத்தில் கழுவிய சிக்கன், மஞ்சள் தூள், உப்பு, காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் அரைத்த மசாலா விழுது ஆகியவற்றை சேர்த்து கலந்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் சேர்க்கவும், நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.
தொடர்ந்து அதில் ஊறவைத்த சிக்கனை சேர்த்து வதக்கி நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கி பின் அரைத்த மசாலா பொடி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும்.
இறுதியாக தண்ணீர் சேர்த்து சிக்கன் வெந்ததும் அதில் அரைத்த மசாலா பொடி, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் சுவையான குண்டூர் சிக்கன் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |