ஷாய் ஹோப், ஹெட்மையர் கூட்டணியில் கயானா அபார வெற்றி
Guyana Amazon Warriors beat Jamaica Kingsmen: கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஜமைக்கா கிங்ஸ்மென் அணிக்கு எதிரான கரீபியன் பிரீமியர் லீக் டி20 போட்டியில், கயானா அமேசான் வாரியர்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஹஸன் கான்
ப்ரொவிடென்ஸ் மைதானத்தில் நடந்த டி20 போட்டியில், கயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் ஜமைக்கா கிங்ஸ்மென் மோதின.
முதலில் ஆடிய ஜமைக்கா கிங்ஸ்மென் 159 ஓட்டங்கள் எடுத்தது. ஹஸன் கான் 29 பந்துகளில் 62 ஓட்டங்கள் விளாசினார்.
குர்பாஸ், ஹெட்மையர்
பின்னர் களமிறங்கிய கயானா அமேசான் வாரியர்ஸ் அணியில் குர்பாஸ் 35 பந்துகளில் 54 ஓட்டங்கள் விளாசினார்.
தின்ட்யால் 33 (17) ஓட்டங்களில் வெளியேற, ஷிம்ரான் ஹெட்மையர் மற்றும் ஷாய் ஹோப் கூட்டணி 17.2 ஓவர்களிலேயே அணியை வெற்றி பெற வைத்தது.
ஷிம்ரான் ஹெட்மையர் (Shimron Hetmyer) 17 பந்துகளில் 30 ஓட்டங்களும், ஷாய் ஹோப் (Shai Hope) 39 ஓட்டங்களும் எடுத்தனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |