குர்பாஸ் சிக்ஸர் மழை! 35 பந்தில் 65 ஓட்டங்கள்..சரிந்த லாகூர் அணி
குளோபல் சூப்பர் லீக் போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லாகூர் கிளாண்டர்ஸை வீழ்த்தியது.
ரஹ்மனுல்லா குர்பாஸ்
ப்ரொவிடென்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் லாகூர் கிளாண்டர்ஸ் மற்றும் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் மோதின.
🤯 Rahmanullah Gurbaz went absolutely berserk!
— Cricket Room (@cricket__room) July 26, 2026
5 sixes in a single over — pure destruction. 🚀🔥#GSL #Cricket pic.twitter.com/jU0zkjCUEp
முதலில் களமிறங்கிய கயானா அணியில் ரஹ்மனுல்லா குர்பாஸ் (Rahmanullah Gurbaz) சிக்ஸர்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டினார். அவர் 35 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 65 ஓட்டங்கள் விளாசினார்.
பின்னர் வந்த மொஹம்மது ஹாரிஸ் 34 ஓட்டங்களும், ஷெப்பர்ட் 29 ஓட்டங்களும் விளாச, கயானா அணி 164 ஓட்டங்கள் குவித்தது.
சுருண்ட லாகூர்
மைக்கேல் பிரேஸ்வெல், மெஹ்ரான் மும்தாஸ் தலா 2 விக்கெட்டுகளும், ரந்தவா, உஸமா மிர் மற்றும் டெலானோ போட்கிடர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய லாகூர் கிளாண்டர்ஸ் அணி 17.2 ஓவர்களில் 111 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஃபர்ஹான் யூசப் 28 (19) ஓட்டங்கள் விளாசினார்.
குடாகேஷ் மோட்டி 4 விக்கெட்டுகளும், டிவைன் பிரிட்டோரியஸ் 2 விக்கெட்டுகளும், ஃபோர்டே, ஷெப்பர்ட், இம்ரான் தாஹிர் மற்றும் மொஹம்மது நபி தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |