சிக்ஸர் மழை பொழிந்த வீரர்! 27 பந்தில் அரைசதம் விளாசல்
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் அதிரடி அரைசதம் விளாசினார்.
குர்பாஸ் அதிரடி
ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி தொடங்கியுள்ளது.
சிறிய இடைவெளிக்கு பிறகு இன்றைய போட்டியில் களமிறங்கிய ரஹ்மனுல்லா குர்பாஸ் ருத்ர தாண்டவம் ஆட தொடங்கினார்.
ஹர்திக் பாண்ட்யா ஓவரில் இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர், முகமது ஷமியின் ஓவரையும் அடித்து நொறுக்கினார்.
@IPL (Twitter)
இரண்டாவது அரைசதம்
சிக்ஸர்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டிய குர்பாஸ், 27 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் அரைசதம் அடித்தார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் இது அவருக்கு 2வது அரைசதம் ஆகும். கொல்கத்தா அணி தற்போதுவரை 10 ஓவரில் 84 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
@IPL (Twitter)